டெல்லியில் பாஜகவை தோற்கடிக்க சீக்கியர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும் தலித்துகள் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும்
தில்லி தேர்தலில் சண்டையென்பது உண்மைக்கு எதிரான பொய்பிரச்சாரங்களுக்கும், விறுப்பத்திற்கெதிரான வெறுப்பு அரசியலுக்கும், சுய மரியாதை மற்றும் முன்னேற்றத்திற்கெதிரான தவறான கருத்துக்கும், கருத்து வேறுபாடுக்கெதிரான ஆதிக்கத்திற்கும், எதிர்ப்பு அரசியலுக்கெதிரான அடிபணிதலும், ஒரு பன்முக கலாச்சார சமூக ஒற்றுமைக்கெதிரான ஒற்றைத்தேசக் கோட்பாட்டிற்குமானது. அயோத்திய கோயிலுக்கு எதிராக ஷாஹீன் பாக் போராட்டமென்பதல்ல.
தேர்தல்களுக்கு முந்தைய நாள் இரவில் தான் இறுதி முடிவுகள் எடுக்கப்படுகிறது. விறுப்பு வெறுப்பு அரசியல், பொய்மை தோய்ந்த கோரமுகம்கொண்ட, ஆதிக்கமனப்பாண்மை கொண்ட, அடிபணிய வைக்கும் வள்ளமைகொண்ட சக்திகளைத் தோற்கடிக்க நாம் அனைவரும் ஒற்றைக்கரம் கொண்டு ஒன்று சேர வேண்டும். பிப்ரவரி 8 ம் தேதி நடைபெறும் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அனைத்து சிறுபான்மையினரும் – சீக்கியர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள், தலித்துகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரதிய ஜனதா கட்சிக்கெதிரான நமது ஒற்றுமையை காட்ட வேண்டும்.
பாரதீய ஜனதா கட்சியின் தோல்வியை உறுதிசெய்யும் வகையில் தில்லயிலுள்ள ஷஹீன் பாக் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஷாஹீன் பாக்கள் சேர்ந்து தில்லியிலுள்ள மத்திய அரசின் அனைத்து அதிகாரங்களையம் அடைகின்றன வகையில் அழுத்தமான ஈ.வி.எம் பட்டனை அழுத்தவும். டெல்லியின் அனைத்து சீக்கியர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும் தலித்துகள் பாஜகவின் வெறுப்பு மற்றும் பிளவுபட்ட அரசியலுக்கு எதிராக வாக்களிக்க ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
1984இன் பஞ்சாப் படுகொலை மீண்டும் செய்யப்படாமலிருக்க, நவம்பர் 1984 டெல்லி கலவரம் மீண்டும் செய்யப்படாமலிருக்க, 1992-93 மும்பை கலவரம் மீண்டும் செய்யப்படாமலிருக்க, 2002 ஆம் ஆண்டின் குஜராத் கலவரம் மீண்டும் செய்யப்படாமலிருக்க, 2020 ஆம் ஆண்டின் ஜாமியா கலவரம் மீண்டும் செய்யப்படாமலிருக்க, அடுத்த 24 மணி நேரத்தில் சரியாக யோசித்து உங்கள் பொன்னான வாக்குகளை டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக நீங்கள் வாக்களிப்பதை உறுதி செய்யுங்கள்.
ஷாஹீன் பாக் தாய்மார்கள் மற்றும் மகள்களுக்கு நீங்கள் கடன்பட்டிருக்கிறீர்கள். காவல்துறையின் மிருகத்தனமான தாக்குதல்களை தாங்கிய ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் மாணவர்களுக்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு கடுமையான விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுக்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். பிதரின் ஷாஹீன் பள்ளியில் உள்ள 11 வயது முஸ்லீம் பள்ளி மாணவிக்கு நீங்கள் கடன்பட்டிருக்கிறீர்கள், CAA க்கு எதிராக பள்ளி நாடகம் விளையாடியதால் அவரது தாயார் தேசத் துரோகத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஒரு கண்ணை இழந்த ஜாமியா மாணவனுக்கும், டெல்லியின் குளிரில் பங்கேற்ற சுட்டிநடை போட்ட குழந்தையை இழந்த ஷாஹீன் பாக் தாய்க்கும், பாஜகவின் குண்டர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஜாமியாவின் காஷ்மீர் மாணவனுக்கும் நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.
இந்த நாட்டின் தற்போதைய அரசியல் நடைமுறை மாற்ற அனைத்து இந்திய மக்களும் 2024 வரை காத்திருக்க வேண்டியிருக்கும், ஆனால் டெல்லி மக்களுக்கு நாளைய நாள் இதைச் செய்ய வாய்ப்பு உள்ளது.
25 லட்சம் முஸ்லிம்கள், 5 லட்சம் சீக்கியர்கள், 4 லட்சம் பஞ்சாபியர்கள், 30 லட்சம் தலித்துகள் மற்றும் 21 லட்சம் தமிழர்கள் மற்றும் தெற்கிந்தியாவை சேர்ந்த தில்லியில் வாழும் பிற மக்கள் தங்கள் வேற றுமைகளை கலைந்து, பிளவுபடுத்தும் அரசியலின் புதிய அவதாரங்களை தோற்கடிக்க வேண்டும். இந்த திசையில் தாங்கள் எடுக்கும் ஒரு படி முன்னெடுத்தல், இந்தியாவின் அரசியல் ஒரு மாற்றத்திற்காக முதல் படியாக இருக்கும்.
8 பிப்ரவரி 2020, பாஜகவை தோற்கடிப்போம்!!!!!!